Latest Events

சுதந்திர தினக் கொண்டாட்டம் – 2018

நேஷனல் மேனேஜ்மெண்ட் கல்லூரியில் சுதந்திர தின கொண்டாட்டம் கடந்த 15-08-2017 அன்று காலை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நமது மாணவச் செல்வங்கள், பட்டொளி வீசிப் பறந்த மூவர்ண தேசியக் கொடிக்கு வீர வணக்கம்  செய்தனர் . இந்நிகழ்ச்சியை  தொகுத்து வழங்கியவர் உதவிப் பேராசிரியர் திரு.கார்த்திகேயன் M.B.A., M.Phil., CS (Exe). தமிழ்த் தாய் வாழ்த்தில் தொடங்கி, தேசிய கீதம் வரை பாடப்பெற்று நிகழ்ச்சி  நிறைவு பெற்றது . இவ்விழாவில் , கல்லூரியின் முதல்வர்  CMA  திரு S.கிருஷ்ணமூர்த்தி,M.B.A (Fin),CA (Inter), A.I.C.W.A., LLB அவர்கள் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து மாணவர்களின் கொடி வணக்கத்தை ஏற்றுக் கொண்டார். பின்னர் பேசிய கல்லூரியின் நிர்வாக அதிகாரி திரு.ஷங்கர் அவர்கள் CA,CMA,CS போன்ற படிப்பை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு , இந்தியாவிலும் அயல் நாடுகளிலும் உள்ள வேலை வாய்ப்புக்களைப் பற்றியும் , உலக அரங்கில் தொழில் துறையில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றியும், இந்தியப் பொருளாதாரத்தையும் , தொழிற்துறைகளையும் எவ்வாறு உயர்த்துவது என்றும் , தனி மனித ஒழுக்கம், தேசபக்தி, கடின உழைப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தைப் பற்றியும் விரிவாகப் பேசி, மாணவர்கள் மனதில் புத்தாக்கமும், புத்துணர்ச்சியும் மலரச் செய்தார் . இறுதியில், உதவிப் பேராசிரியர் திரு.கார்த்திகேயன் அவர்கள் அனைவருக்கும் நன்றி நவின்றார்; தேசிய கீதம் பாடப் பெற்று, விழா இனிதே நிறைவு பெற்றது . ஜெய்ஹிந்!!!!

சுதந்திர தினக் கொண்டாட்டம் – 2018 Read More »

குடியரசு தின விழா கொண்டாட்டம் – 2018

ஈரோடு பெருந்துறையில் கடந்த 12 வருடங்களாக வெற்றிகரமாக CA, CMA , CS போன்ற ஆடிட்டர் படிப்புகளை பயிற்றுவித்து தொழிற் வல்லுநர்களை உருவாக்கி வரும் நேஷனல் மேனேஜ்மென்ட் கல்லூரி தனது அன்பார்ந்த அறிவுச் செல்வங்களான மாணவ, மாணவியர்களோடும் பேரன்பு கொண்ட பேராசிரிய பெருமக்களோடும் மற்றும் இதர அனைத்துத் துறை ஊழியர்களோடும் மிகச் சீராகவும், சிறப்பாகவும், மிகுந்த தேச பக்தியோடும் நமது 69ஆம் ஆண்டு குடியரசு தின விழாவை கொண்டாடி மகிழ்ந்தது. தமிழ்த்தாய் வாழ்த்தும், கொடி வணக்கப் பாடலும், தேசிய கீதமும் பாடப்பெற்று இனிப்புகள் வழங்கி இனிதே நிறைவு பெற்றது . இதில் கல்லூரி முதல்வர் CMA திரு .S .கிருஷ்ணமூர்த்தி M.B.A (Fin),CA, A.I.C.W.A., LLB அவர்கள் கூடி இருந்த அனைவருக்கும் வாழ்த்துரை கூறினார். மாணவ, மாணவிகள் தங்களது தேச பக்தி மிகுந்த, உரைகளின் மூலம் தங்களது சக மாணவர்களுக்கு தேச பக்தியின் இன்றியமையாமை குறித்து வீர உரையாற்றினர். தேசிய கீதத்தோடு விழா இனிதே நிறைவு பெற்றது .

குடியரசு தின விழா கொண்டாட்டம் – 2018 Read More »

ரத்ததான முகாம் – 2018

NMC – ஆடிட்டிங் கல்லூரியில் ரத்ததான முகாம் ஈரோடு , ஜனவரி ஜனவரி 22.01.2018 அன்று பெருந்துறை நேஷனல் மேனேஜ்மென்ட் கல்லூரி மற்றும் Erode Health Unit Districஇணைந்து ரத்த தான முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது . NMC – கல்லூரியின் தலைமை நிர்வாகி திரு.N.விஜயகுமார் அவர்கள் கலந்து கொண்டு முகாமினை துவங்கி வைத்தார் . முகாம் Dr.விக்னேஷ் MBBS(வட்டார மருத்துவ அலுவலர் திங்களூர்) அவர்களது மேற்பார்வையில் நடைபெற்றது மற்றும் மருத்துவ அலுவலர் Dr.சாந்தநாயகி MBBS (அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பெத்தாம்பாளையம்), S.ஜெயலட்சுமி (சுகாதார ஆய்வாளர்) ஆகியோர் உடன் இருந்தனர் அப்பொழுது கல்லூரியின் முதல்வர் CMA திரு S.கிருஷ்ணமூர்த்தி M.B.A (Fin),CA , A.I.C.W.A., LLB, நிர்வாக அதிகாரி மற்றும் பேராசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில் 100 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.முகாமின் முடிவில் ரத்த தானம் செய்த மாணவர்களைப் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கப்பட்டது . இரத்ததானம் செய்வீர்! மனித வளம் காப்பீர்!

ரத்ததான முகாம் – 2018 Read More »

கண் பரிசோதனை முகாம் – 2018

27.03.2018 அன்று பெருந்துறை நேஷனல் மேனேஜ்மெண்ட் கல்லூரியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. 27.03.2018 அன்று பெருந்துறை நேஷனல் மேனேஜ்மென்ட் கல்லூரி மற்றும் Erode Health Unit Distric இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது . NMC – கல்லூரியின் தலைமை நிர்வாகி திரு.N.விஜயகுமார் அவர்கள் கலந்து கொண்டு முகாமினை துவங்கி வைத்தார். முகாம் Dr.விக்னேஷ் MBBS (வட்டார மருத்துவ அலுவலர் திங்களூர்) அவர்களது மேற்பார்வையில் நடைபெற்றது மற்றும் மருத்துவ அலுவலர் Dr.சாந்தநாயகி MBBS (அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பெத்தாம்பாளையம்), S.ஜெயலட்சுமி (சுகாதார ஆய்வாளர்) ஆகியோர் உடன் இருந்தனர் அப்பொழுது கல்லூரியின் முதல்வர் CMA திரு S.கிருஷ்ணமூர்த்தி M.B.A (Fin),CA , A.I.C.W.A., LLB, நிர்வாக அதிகாரி மற்றும் பேராசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில் 300 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கண் பரிசோதனை, மற்றும் உடற்பரிசோதனை செய்யப்பட்டு ஊட்டச்சத்து மற்றும் கால்சியம் மாத்திரைகள் வழங்கப்பட்டன.

கண் பரிசோதனை முகாம் – 2018 Read More »

பொங்கல் கொண்டாட்டம்

ஈரோடு பெருந்துறை நேஷனல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் பொங்கல் விழாவை முன்னிட்டு 11.01.2018 (வியாழக்கிழமை) அன்று கல்லூரி முதல்வர் திரு CMA.S .கிருஷ்ணமூர்த்தி M.B.A (Fin),CA , A.I.C.W.A., LLB, அவர்கள் தலைமையில் மாணவ, மாணவியர் பாரம்பரிய முறைப்படி புதுப் பானையில் பொங்கல் வைத்துக் கொண்டாடினர். இதன் மூலமாக எங்கள் மாணவர்களுக்கு உழவர்களின் முக்கியத்துவம் குறித்தும் , வேளாண்மையின் அத்தியாவசியம் குறித்தும் மிகத் தெளிவாக அறிவுறுத்தப்பட்டு நாம் நமது தமிழர் பண்பாட்டினை என்றென்றும் கைக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது . பொங்கல் பொங்கியதும் “பொங்கலோ பொங்கல்” எனக் கூறி மாணவ, மாணவிகள் ஒருவருக்கொருவர் தங்கள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். அப்போது கல்லூரியின் நிர்வாக அதிகாரி மற்றும் பேராசிரியர்கள் உடன் இருந்தனர்.

பொங்கல் கொண்டாட்டம் Read More »

Communication Class

English Communicaiton And Personality Development Classes for our students being conducted by Mr.Antony Partrick, [B.Lit] regularly,who has more than 25 years of experience in the field of Teaching English to the students and faculties , Government staff (including Defence Services Staff College ,Wellington,The Nilgris ) throughout the country. It helps our students to make the best in their presentation in exams without any grammetical mistakes and with professional way of writing, which will be more useful in their career as a CA / CMA / CS.

Communication Class Read More »

சுதந்திர தின விழா கொண்டாட்டம் – 2018

ஈரோடு பெருந்துறையில் கடந்த 12 வருடங்களாக வெற்றிகரமாக CA, CMA , CS போன்ற ஆடிட்டர் படிப்புகளை பயிற்றுவித்து தொழிற் வல்லுநர்களை உருவாக்கி வரும் நேஷனல் மேனேஜ்மென்ட் கல்லூரி தனது அன்பார்ந்த அறிவுச் செல்வங்களான மாணவ, மாணவியர்களோடும் பேரன்பு கொண்ட பேராசிரிய பெருமக்களோடும் மற்றும் இதர அனைத்துத் துறை ஊழியர்களோடும் மிகச் சீராகவும், சிறப்பாகவும், மிகுந்த தேச பக்தியோடும் நமது 72 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை கொண்டாடி மகிழ்ந்தது. தமிழ்த்தாய் வாழ்த்தும், கொடி வணக்கப் பாடலும், பாடப்பெற்று விழா தொடங்கியது. இவ்விழாவில் கல்லூரி முதல்வர் CMA திரு .S .கிருஷ்ணமூர்த்தி M.B.A (Fin),CA, A.I.C.W.A., LLB மற்றும் கல்லூரியின் நிர்வாக அதிகாரி திரு V.சிவானந்த வல்லபன் அவர்களும், கூடி இருந்த அனைவருக்கும் வாழ்த்துரை கூறினார். மாணவ, மாணவிகள் தங்களது தேச பக்தி மிகுந்த, உரைகளின் மூலம் தங்களது சக மாணவர்களுக்கு தேச பக்தியின் இன்றியமையாமை குறித்து வீர உரையாற்றினர். COSMA FEST – கல்லூரிகளுக்கு இடையிலானா போட்டிகளில் NMC மாணவ , மாணவிகள் பங்கு பெற்று 3-ஆம் இடம் பெற்றனர் . அதற்கான பரிசளிப்பு விழாவும் இனிதே நடைபெற்றது. இத்துடன் இனிப்புகள் வழங்கப்பட்டு தேசிய கீதத்தோடு விழா இனிதே நிறைவு பெற்றது .

சுதந்திர தின விழா கொண்டாட்டம் – 2018 Read More »

Guest Lecture of Shri.CMA Dr.Maheswaran ACMA.,ACS.,MBA.,Ph.D

On 02nd Sept-2017 Guest Lecture was presented to our beloved students by Shri.CMA Dr.Maheswaran ACMA.,ACS.,MBA.,Ph.D, Vice President (Finance & Infrastructure) KGISL Technologies & Infrastructure, a sister concern of   K.G. Group , Coimbatore. He is enriched with more than 30 years of Industrial Experience and 20 Years of Teaching Experience in many Institutions; He is a Former Treasurer of CMA Chapter, Coimbatore. He is also an Expert consultant for many corporates. He had been the Judge for many competitions and Fests conducted by both ICMAI & ICSI.

Guest Lecture of Shri.CMA Dr.Maheswaran ACMA.,ACS.,MBA.,Ph.D Read More »

COSMA FEST – 2017

கடந்த 19ம் தேதி ஆகஸ்ட் 2017 அன்று கோவை  PSG Tech கல்லூரி அரங்கில் ICMAI கோவை மண்டலம் சார்பாக நடைபெற்ற COSMA FEST-2017 விழாவில் நமது கல்லூரி மாணாக்கர்களின் கடந்த 19ம் தேதி ஆகஸ்ட் 2017 அன்று கோவை  PSG Tech கல்லூரி அரங்கில் ICMAI கோவை மண்டலம் சார்பாக நடைபெற்ற COSMA FEST-2017விழாவில் நமது கல்லூரி மாணாக்கர்களின் சாதனை பட்டியல்.

COSMA FEST – 2017 Read More »

CA-CPT தேர்வில் NMC மாணவர்கள் சாதனை

தேசிய அளவில் தேர்ச்சி 2017ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி அன்று நடைபெற்ற CA – CPT தேர்வில் மிகச் சிறந்த மதிப்பெண்களோடு வெற்றி பெற்ற 50 மாணவ, மாணவியர்களுக்கு, நமது 69வது குடியரசு தினத்தன்று மாணவர்களின் திறமையையும், உழைப்பையும் பாராட்டி நேஷனல் மேனேஜ்மென்ட் காலேஜ் நிர்வாகம் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு நற்சான்றிதழ்களும், நினைவுப் பரிசுகளும் கல்லூரி நிர்வாகத்தினரால் வழங்கப்பட்டது. இவ்விழாவினை கல்லூரியின் தலைமை நிர்வாகி திரு.N.விஜயகுமார் மற்றும் முதல்வர் CMA திரு S.கிருஷ்ணமூர்த்தி M.B.A (Fin),CA, A.I.C.W.A., LLB அவர்கள் தலைமை ஏற்று நடத்தினர். இவ்விழாவில் கல்லூரியின் பேராசிரியர்கள் CA திரு.கோவிந்த் M ஜோஷி B.Sc., FCA., FCS., CMAதிரு.K.V.முரளி ACMA.,M.Com.,M.Phil., அவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். இத்தேர்வில் வெற்றி பெறுவதற்கு மிக உறுதுணையாக இருந்து, கண்துஞ்சாது அயராது பாடுபட்ட ஆசிரியப் பெருமக்களுக்கும், கல்லூரி விடுதியில் அவர்களுக்கு மிகவும் உறுதுணையாக இருந்து STUDY HOURS -ல் அவர்களது சந்தேகங்கள் எல்லாம் தீர்த்து வழி நடத்திய STUDY SUPERVISORS அவர்களுக்கும் பாராட்டும், நினைவுப் பரிசும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளின் பெற்றோர்களும் கலந்து கொண்டு மனம் பூரித்தனர். CA – CPT தேர்வில் வெற்றி பெற்ற இம்மாணவ , மாணவிகள் அனைவருக்கும் அவர்களது CA-Intermediate படிப்பிலும் மிகச்சிறந்த மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற அத்துறை சார்ந்த பேராசிரியப் பெருமக்களின் விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. கல்லூரியின் சார்பில் இவ்விழாவினை சிறப்பித்த அனைவருக்கும் உதவிப் பேராசிரியை செல்வி J.Joshila Jane M.Sc .,M.Phil அவர்கள் நன்றியுரை நல்கினார். தேசிய கீதம் பாடப் பெற்று விழா இனிதே நிறைவு பெற்றது.

CA-CPT தேர்வில் NMC மாணவர்கள் சாதனை Read More »