பொங்கல் கொண்டாட்டம்

ஈரோடு பெருந்துறை நேஷனல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் பொங்கல் விழாவை முன்னிட்டு 11.01.2018 (வியாழக்கிழமை) அன்று கல்லூரி முதல்வர்

திரு CMA.S .கிருஷ்ணமூர்த்தி M.B.A (Fin),CA , A.I.C.W.A., LLB, அவர்கள் தலைமையில் மாணவ, மாணவியர் பாரம்பரிய முறைப்படி புதுப் பானையில் பொங்கல் வைத்துக் கொண்டாடினர்.

இதன் மூலமாக எங்கள் மாணவர்களுக்கு உழவர்களின் முக்கியத்துவம் குறித்தும் , வேளாண்மையின் அத்தியாவசியம் குறித்தும் மிகத் தெளிவாக அறிவுறுத்தப்பட்டு நாம் நமது தமிழர் பண்பாட்டினை என்றென்றும் கைக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது .

பொங்கல் பொங்கியதும் “பொங்கலோ பொங்கல்” எனக் கூறி மாணவ, மாணவிகள் ஒருவருக்கொருவர் தங்கள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

அப்போது கல்லூரியின் நிர்வாக அதிகாரி மற்றும் பேராசிரியர்கள் உடன் இருந்தனர்.

Enquire Now