சுதந்திர தின விழா கொண்டாட்டம் – 2018

ஈரோடு பெருந்துறையில் கடந்த 12 வருடங்களாக வெற்றிகரமாக CA, CMA , CS போன்ற ஆடிட்டர் படிப்புகளை பயிற்றுவித்து தொழிற் வல்லுநர்களை உருவாக்கி வரும் நேஷனல் மேனேஜ்மென்ட் கல்லூரி தனது அன்பார்ந்த அறிவுச் செல்வங்களான மாணவ, மாணவியர்களோடும் பேரன்பு கொண்ட பேராசிரிய பெருமக்களோடும் மற்றும் இதர அனைத்துத் துறை ஊழியர்களோடும் மிகச் சீராகவும், சிறப்பாகவும், மிகுந்த தேச பக்தியோடும் நமது 72 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை கொண்டாடி மகிழ்ந்தது. தமிழ்த்தாய் வாழ்த்தும், கொடி வணக்கப் பாடலும், பாடப்பெற்று விழா தொடங்கியது.

இவ்விழாவில் கல்லூரி முதல்வர் CMA திரு .S .கிருஷ்ணமூர்த்தி M.B.A (Fin),CA, A.I.C.W.A., LLB மற்றும் கல்லூரியின் நிர்வாக அதிகாரி திரு V.சிவானந்த வல்லபன் அவர்களும், கூடி இருந்த அனைவருக்கும் வாழ்த்துரை கூறினார். மாணவ, மாணவிகள் தங்களது தேச பக்தி மிகுந்த, உரைகளின் மூலம் தங்களது சக மாணவர்களுக்கு தேச பக்தியின் இன்றியமையாமை குறித்து வீர உரையாற்றினர். COSMA FEST – கல்லூரிகளுக்கு இடையிலானா போட்டிகளில் NMC மாணவ , மாணவிகள் பங்கு பெற்று 3-ஆம் இடம் பெற்றனர் . அதற்கான பரிசளிப்பு விழாவும் இனிதே நடைபெற்றது. இத்துடன் இனிப்புகள் வழங்கப்பட்டு தேசிய கீதத்தோடு விழா இனிதே நிறைவு பெற்றது .

Make an Enquiry

ADMISSIONS OPEN FOR 2020-21

REQUIREMENTS

Working Time : 09.00 am – 05.00 pm (MONDAY – SATURDAY, SUNDAY also working )
Note: Bring Original Certificates along with 3 Sets of Xerox Copies