சுதந்திர தினக் கொண்டாட்டம் – 2018

நேஷனல் மேனேஜ்மெண்ட் கல்லூரியில் சுதந்திர தின கொண்டாட்டம் கடந்த 15-08-2017 அன்று காலை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நமது மாணவச் செல்வங்கள், பட்டொளி வீசிப் பறந்த மூவர்ண தேசியக் கொடிக்கு வீர வணக்கம்  செய்தனர் . இந்நிகழ்ச்சியை  தொகுத்து வழங்கியவர் உதவிப் பேராசிரியர் திரு.கார்த்திகேயன் M.B.A., M.Phil., CS (Exe). தமிழ்த் தாய் வாழ்த்தில் தொடங்கி, தேசிய கீதம் வரை பாடப்பெற்று நிகழ்ச்சி  நிறைவு பெற்றது .

இவ்விழாவில் , கல்லூரியின் முதல்வர்  CMA  திரு S.கிருஷ்ணமூர்த்தி,M.B.A (Fin),CA (Inter), A.I.C.W.A., LLB அவர்கள் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து மாணவர்களின் கொடி வணக்கத்தை ஏற்றுக் கொண்டார்.

பின்னர் பேசிய கல்லூரியின் நிர்வாக அதிகாரி திரு.ஷங்கர் அவர்கள் CA,CMA,CS போன்ற படிப்பை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு , இந்தியாவிலும் அயல் நாடுகளிலும் உள்ள வேலை வாய்ப்புக்களைப் பற்றியும் , உலக அரங்கில் தொழில் துறையில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றியும், இந்தியப் பொருளாதாரத்தையும் , தொழிற்துறைகளையும் எவ்வாறு உயர்த்துவது என்றும் , தனி மனித ஒழுக்கம், தேசபக்தி, கடின உழைப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தைப் பற்றியும் விரிவாகப் பேசி, மாணவர்கள் மனதில் புத்தாக்கமும், புத்துணர்ச்சியும் மலரச் செய்தார் .

இறுதியில், உதவிப் பேராசிரியர் திரு.கார்த்திகேயன் அவர்கள் அனைவருக்கும் நன்றி நவின்றார்; தேசிய கீதம் பாடப் பெற்று, விழா இனிதே நிறைவு பெற்றது .

ஜெய்ஹிந்!!!!

Enquire Now