ஈரோடு பெருந்துறையில் கடந்த 12 வருடங்களாக வெற்றிகரமாக CA, CMA , CS போன்ற ஆடிட்டர் படிப்புகளை பயிற்றுவித்து தொழிற் வல்லுநர்களை உருவாக்கி வரும் நேஷனல் மேனேஜ்மென்ட் கல்லூரி தனது அன்பார்ந்த அறிவுச் செல்வங்களான மாணவ, மாணவியர்களோடும் பேரன்பு கொண்ட பேராசிரிய பெருமக்களோடும் மற்றும் இதர அனைத்துத் துறை ஊழியர்களோடும் மிகச் சீராகவும், சிறப்பாகவும், மிகுந்த தேச பக்தியோடும் நமது 69ஆம் ஆண்டு குடியரசு தின விழாவை கொண்டாடி மகிழ்ந்தது. தமிழ்த்தாய் வாழ்த்தும், கொடி வணக்கப் பாடலும், தேசிய கீதமும் பாடப்பெற்று இனிப்புகள் வழங்கி இனிதே நிறைவு பெற்றது .
இதில் கல்லூரி முதல்வர் CMA திரு .S .கிருஷ்ணமூர்த்தி M.B.A (Fin),CA, A.I.C.W.A., LLB அவர்கள் கூடி இருந்த அனைவருக்கும் வாழ்த்துரை கூறினார். மாணவ, மாணவிகள் தங்களது தேச பக்தி மிகுந்த, உரைகளின் மூலம் தங்களது சக மாணவர்களுக்கு தேச பக்தியின் இன்றியமையாமை குறித்து வீர உரையாற்றினர். தேசிய கீதத்தோடு விழா இனிதே நிறைவு பெற்றது .