தேசிய அளவில் தேர்ச்சி
2017ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி அன்று நடைபெற்ற CA – CPT தேர்வில் மிகச் சிறந்த மதிப்பெண்களோடு வெற்றி பெற்ற 50 மாணவ, மாணவியர்களுக்கு, நமது 69வது குடியரசு தினத்தன்று மாணவர்களின் திறமையையும், உழைப்பையும் பாராட்டி நேஷனல் மேனேஜ்மென்ட் காலேஜ் நிர்வாகம் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு நற்சான்றிதழ்களும், நினைவுப் பரிசுகளும் கல்லூரி நிர்வாகத்தினரால் வழங்கப்பட்டது.
இவ்விழாவினை கல்லூரியின் தலைமை நிர்வாகி திரு.N.விஜயகுமார் மற்றும் முதல்வர் CMA திரு S.கிருஷ்ணமூர்த்தி M.B.A (Fin),CA, A.I.C.W.A., LLB அவர்கள் தலைமை ஏற்று நடத்தினர். இவ்விழாவில் கல்லூரியின் பேராசிரியர்கள் CA திரு.கோவிந்த் M ஜோஷி B.Sc., FCA., FCS., CMAதிரு.K.V.முரளி ACMA.,M.Com.,M.Phil., அவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
இத்தேர்வில் வெற்றி பெறுவதற்கு மிக உறுதுணையாக இருந்து, கண்துஞ்சாது அயராது பாடுபட்ட ஆசிரியப் பெருமக்களுக்கும், கல்லூரி விடுதியில் அவர்களுக்கு மிகவும் உறுதுணையாக இருந்து STUDY HOURS -ல் அவர்களது சந்தேகங்கள் எல்லாம் தீர்த்து வழி நடத்திய STUDY SUPERVISORS அவர்களுக்கும் பாராட்டும், நினைவுப் பரிசும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளின் பெற்றோர்களும் கலந்து கொண்டு மனம் பூரித்தனர். CA – CPT தேர்வில் வெற்றி பெற்ற இம்மாணவ , மாணவிகள் அனைவருக்கும் அவர்களது CA-Intermediate படிப்பிலும் மிகச்சிறந்த மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற அத்துறை சார்ந்த பேராசிரியப் பெருமக்களின் விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
கல்லூரியின் சார்பில் இவ்விழாவினை சிறப்பித்த அனைவருக்கும் உதவிப் பேராசிரியை செல்வி J.Joshila Jane M.Sc .,M.Phil அவர்கள் நன்றியுரை நல்கினார். தேசிய கீதம் பாடப் பெற்று விழா இனிதே நிறைவு பெற்றது.