Chartered Accountant (CA) ஆவதற்கான எளிய வழிகாட்ட

CA ஆக வேண்டும் என்ற கனவா? இது உண்மையில் சாத்தியமா? Dreaming of becoming a CA? Turn your dream into a clear, achievable goal..

What is a Chartered Accountancy Course? | Chartered Accountancy படிப்பு என்றால் என்ன?

Chartered Accountancy Course is a Globally Recognized Professional Qualification and also equivalent to Post Graduation Degree. The Institute of Chartered Accountants of India (ICAI) is the regulating body, which grants this qualification in India. (www.icai.org)

வெற்றிகரமான CAக்கள் தங்கள் தொழில் வாழ்க்கையை உயர் ஊதியம் அல்லது மதிப்புமிக்க நிறுவனங்களில் மூத்த பதவிகள் மூலமாகவோ அல்லது சுதந்திரமான பயிற்சியைத் தொடங்குவதன் மூலமாகவோ பாதுகாத்துக் கொள்ள முடியும், நிதி ஸ்திரத்துடன் தொழில்முறை அங்கீகாரம் மற்றும் சமூக மதிப்பீட்டையும் பெறலாம்.

How Does One Become a Chartered Accountant? | Chartered Accountant எப்படி ஆவது?

To become a Chartered Accountant, you must clear three stages: CA Foundation, CA Intermediate, CA Final. Chartered Accountant ஆவதற்கு மூன்று நிலைகளை கடக்க வேண்டும்: CA Foundation, CA Intermediate, CA Final.

CA தேர்வு அமைப்பு மற்றும் கட்டணங்கள் மேலோட்டம் | CA Exam Structure & Fee Overview

Stage / Exam Level Number of Papers Registration Fee* (Fee to be paid to ICAI) Exam / Form Fee (Indian Centres)
CA Foundation 4 Papers ₹ 9,000 (plus ₹200 prospectus + ₹200 student journal, optional ₹400 member’s journal) ₹ 1,500
CA Intermediate 6 Papers (Group 1=3, Group 2=3) Both Groups: ~ ₹ 18,000 Both Groups: ₹ 2,700
CA Final 6 Papers (Group 1=3, Group 2=3) ₹ 22,000 Single Group: ₹ 1,800, Both Groups: ₹ 3,300

Syllabus, fees, and exam structure are subject to ICAI updates. Students are advised to refer to ICAI notifications for latest changes. (Note: In CA Intermediate level, Single group registration is not possible; only both the Groups should be registered.)

12-ம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்புக்குப் பிறகு தகுதி | Eligibility After 12th & Graduation

After 12th | 12-ம் வகுப்புக்குப் பிறகு:

அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் 12-ம் வகுப்பை முடித்த எந்த பிரிவு மாணவர்களும் CA Foundation படிப்பில் பதிவு செய்யலாம். The students from any stream are eligible to register for the CA Foundation Course after completing Class 12 from a recognized board.

After Graduation | பட்டப்படிப்புக்குப் பிறகு:

பட்டதாரிகள் Foundation நிலைையத் தவிர்த்து நேரடியாக CA Intermediate இல் நுழையலாம். Graduates can skip the Foundation level and directly enter CA Intermediate.

  • வணிகப் பட்டதாரிகள்: குறைந்தபட்சம் 55% | Commerce graduates: Minimum 55%
  • வணிகம் அல்லாத பட்டதாரிகள்: குறைந்தபட்சம் 60% | Non-commerce graduates: Minimum 60%
  • இறுதி ஆண்டு மாணவர்களும் தற்காலிகமாக பதிவு செய்யலாம் | Final-year students can also register provisionally

Roadmap to become a CA | Chartered Accountant ஆவதற்கான வழிகாட்டி

படி 1: Chartered Accountant உங்களுக்கு ஏற்றதா என முடிவு செய்யுங்கள் | Step 1: Decide if CA is Right for You

  • வணிகம், கணக்கியல் மற்றும் வரிவிதிப்பு மீது உங்களுக்கு எவ்வளவு ஆர்வம் உள்ளது என்பதை கருத்தில் கொள்ளுங்கள் | Consider how enthusiastic you are about business, accounting, and taxation.
  • உங்கள் தொழில் இலக்குகள் மற்றும் அர்ப்பணிப்பை கருத்தில் கொள்ளுங்கள் | Consider your career goals and commitment.
  • நிதித் துறையில் நீண்ட கால வேலை வாய்ப்புகளை ஆராயுங்கள் | Explore longer-term job prospects in finance.

படி 2: CA Foundation இல் சேர்ந்து தேர்ச்சி பெறுங்கள் | Step 2: Enroll and Clear CA Foundation (If Applicable)

  • 12-ம் வகுப்புக்குப் பிறகு ICAI உடன் பதிவு செய்யுங்கள் | Register with ICAI after 12th
  • 4 பாடங்களுக்கு படித்து தேர்வில் எழுதுங்கள் | Study for 4 subjects and appear in the exam
  • பயிற்சி பெறுங்கள் அல்லது சுய-கற்றல் மூலம் கற்றுக்கொள்ளுங்கள் | Train or learn as self-taught

படி 3: CA Intermediate இல் பதிவு செய்து தேர்ச்சி பெறுங்கள் | Step 3: Register, study for 8 months and pass the CA Intermediate

  • Foundation ஐ கடந்த பிறகு அல்லது நேரடி நுழைவு மூலம் பதிவு செய்யுங்கள் | Register after clearing Foundation or through Direct Entry with any degree
  • 2 பாகங்களாக பிரிக்கப்பட்ட 6 பேப்பர்கள் உள்ளன | Consists of 6 papers divided into 2 groups
  • பல மாணவர்கள் குழு வாரியாக தோன்றுவதை தேர்வு செய்கிறார்கள் | A student may appear either group or both the groups simultaneously

படி 4: Articleship/2 வருட செயல் முறை பயிற்சியை முடியுங்கள் | Step 4: Complete Articleship / 2-Year Articleship Training

  • CA Intermediate இன் Group 1 & 2 ஐ தேர்ச்சி பெற்ற பிறகு | After passing both the Groups of CA Intermediate
  • சுய பயிற்சி செய்யும் (Self Practice / Independent Practice) CA தேர்ச்சி பெற்ற Auditor இன் கீழ் 2 ஆண்டுகள் Articleship / Practical Training செய்ய வேண்டும் | Should undergo 2 years of Articleship under a practicing CA
  • தணிக்கை, வரிகள் (நேரடி வரிகள் & GST), வரி சட்டங்கள், நிறுவன சட்டங்கள், நிதி நிர்வாகம் போன்றவற்றில் பயிற்சி மற்றும் நேரடி அனுபவங்களை பெறுங்கள் | Gain hands-on experience in Accounting, Audit, Risk, Tax and Regulatory, and Assurance service, Digi-tech, Corporate Tax / Direct Tax / Indirect Tax (GST) Management Consultancy and other related services

படி 5: CA Final தேர்வில் தேர்ச்சி பெறுங்கள் | Step 5: Pass CA Final Exam

  • Intermediate மற்றும் நேரடி களப் பயிற்சியை முடித்த பிறகு, இறுதி (Final) தேர்வை எழுதுங்கள். | Appear after 6 months on completion of 2 years Articleship Training
  • நிதி அறிக்கை, மேம்பட்ட நிதி நிர்வாகம், மேம்பட்ட தணிக்கை மற்றும் நம்பகத்தன்மை & உறுதிமொழி, தொழில் தர்மம் போன்ற பாடங்களை உள்ளடக்கிய 6 தாள்கள் | 6 papers covering Advanced and Strategic level papers
  • CA Final தேர்வானது உலகளாவிய கல்வித் தரங்கள் மற்றும் தேசிய கல்விக் கொள்கை, 2020 ஆகியவற்றுடன் பாடத்திட்டத்தை இணைத்து எதிர்காலத்திற்கு ஏற்ற தொழில் வல்லுநர்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது | CA Final exam tests in-depth practical and applicable conceptual knowledge

படி 6: ICAI உடன் உறுப்பினராக சேருங்கள் | Step 6: Enroll as a Member with ICAI

  • Final தேர்வில் தேர்ச்சி பெற்றவுடன், Chartered Accountant – ஆக உங்களைப் பதிவு செய்து கொள்ளவும் | Once you pass the Final exam, apply and register for the membership as a Qualified Chartered Accountant with ICAI
  • இப்போது நீங்கள் ஒரு பதிவு பெற்ற Chartered Accountant | Get officially enrolled as a member of ICAI
  • இப்போது நீங்கள் இந்தியா மற்றும் உலகங்கும், சட்டப்பூர்வமாக பணியாற்ற அனுமதிக்கப்படுகிறீர்கள் | Now, you’re legally permitted to practice as a CA in India or in Abroad where our CAs are legally permitted

CA Syllabus | CA பாடத்திட்டம்

CA Foundation

Foundation என்பது +2 முடித்த மாணவர் எவருக்கும் Chartered Accountancy என்ற மதிப்பு மிக்க தொழில் படிப்பின் நுழைவு பாதையாகும். | Foundation is the entry way for any +2 student to the esteemed career of Chartered Accountancy Course.

  1. Accounting
  2. Business Laws
  3. Quantitative Aptitude
  4. Business Economics

CA Intermediate

CA Intermediate நிலை Chartered Accountancy பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல் ஆகும். | The CA Intermediate level is a significant milestone in the Chartered Accountancy journey.

GROUP 1

  1. Advanced Accounting
  2. Corporate and Other Laws
  3. Taxation
    • Section A – Income-Tax Law
    • Section B – Goods and Services Tax (GST)

GROUP 2

  1. Cost and Management Accounting
  2. Auditing and Ethics
  3. Financial Management & Strategic Management

CA Final

CA Final மதிப்புமிக்க Chartered Accountancy தகுதியின் இறுதி நிலை ஆகும். | CA Final is the ultimate stage of the prestigious Chartered Accountancy qualification.

GROUP 1

  1. Financial Reporting
  2. Advanced Financial Management
  3. Advanced Auditing, Assurance and Professional Ethics

GROUP 2

  1. Direct Tax Laws and International Taxation
  2. Indirect Tax Laws
  3. Integrated Business Solutions (Multi – Disciplinary Case Study with Strategic Management)

Important Information | முக்கியமான தகவல்கள்

CA தகுதி எந்த பட்டத்திற்கு சமமானது? | Is the CA Qualification equal to any degree?

ஆம். CA / CMA / CS தகுதிகள் UGC ஆல் முதுகலை (PG) பட்டத்திற்கு சமமானதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. | Yes. CA / CMA / CS qualifications are recognized by the UGC as equivalent to a Postgraduate (PG) Degree.

CA படிப்பை வெற்றிகரமாக முடிக்க எத்தனை ஆண்டுகள் ஆகும்? | How Many Years Does It Take to Complete CA?

குறைந்தபட்சம் 4 ஆண்டுகள். தொடர்ந்து உழைக்கும் மாணவர்கள் பொதுவாக 4 – 5 ஆண்டுகளுக்குள் அதை முடித்து Chartered Accountant ஆகலாம். | A minimum of 4 years. Students who prepare consistently usually complete the course within 4-5 years.

CA மாணவர்கள் மேம்படுத்த வேண்டிய கூடுதல் திறன்கள் | Additional skills CA students must develop

  • நல்ல ஆங்கில தொடர்பு | Good English communication
  • கணினி தட்டச்சு | Computer typing
  • Tally Prime
  • Microsoft Excel
  • Data Analytics கருவிகள் | Data Analytics tools

If You Don’t Clear CA Final? | CA Final தேர்ச்சி பெறவில்லை என்றால் என்ன செய்வது?

CA தகுதி என்பது ஒரு மலையில் ஏறுவது போன்றது. நீங்கள் உச்சியை அடையாவிட்டாலும், நீங்கள் அடையும் உயரம் உங்களுக்கு முக்கிய தொழில் நன்மைகளை அளிக்கிறது. | The CA qualification is like climbing a mountain. Even if you do not reach the peak, the height you achieve still gives you major career benefits.

  • CA Intermediate மட்டும் முடிப்பது பல வேலை வாய்ப்புகளைக் கொண்டு வருகிறது. | Completing CA Intermediate alone brings many job opportunities.
  • CA Foundation கூட உங்கள் தொழில் மதிப்பை அதிகரிக்கிறது. | Even CA Foundation increases your career value.
  • ICAI ஆனது CA Final தேர்வை மட்டும் தேர்ச்சி பெறாதவர்களுக்கும் Business Accounting Associate (BAA) சான்றிதழ் வழங்குகிறது. | ICAI also grants Business Accounting Associate (BAA) Certificate for those who didn’t clear only CA Final exam.

Note: Syllabus, fees, and exam structure are subject to ICAI updates. Students are advised to refer to official ICAI notifications for the latest changes.

Begin your Chartered Accountancy journey today — a prestigious path to professional excellence and financial success. உங்கள் Chartered Accountancy பயணத்தை இன்றே துவங்குங்கள் — தொழில் முன்னேற்றம் மற்றும் நிதி வெற்றிக்கான மதிப்புமிக்க பாதை.